புளூ ஹெவன் விளையாட்டைத் தடை செய்யக் கோரி பிரதமருக்கு கேரள முதலமைச்சர் கடிதம்

புளூ வேல் இணைய விளையாட்டுக்குத் தடை விதிக்குமாறு வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கேரள முதல் அமைச்சர் பினராய் விஜயன் அவசர கடிதம் எழுதியுள்ளார். இணையம் மற்றும் செல்போன்களில் இளம் தலைமுறையினரிடையே வெகு வேகமாகப் பரவி வரும் புளு ஹெவன் விளையாட்டு இளைஞர்களைத் தற்கொலைக்குத் தூண்டுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மோடிக்கு எழுதிய கடிதத்தில், நமது வீட்டு வாசலில் ஆபத்து வந்து நிற்பதாக பினராய் விஜயன் குறிப்பிட்டுள்ளார். இணைய விளையாட்டு என்ற பெயரில் பங்கேற்பாளர் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வதும் இறுதியில் தற்கொலை செய்துக் கொள்வதும் ஒரு விளையாட்டா என்று கேள்வி எழுப்பியுள்ள கேரள முதலமைச்சர், இத்தகைய ஆபத்தான விளையாட்டை தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன