Advertisement
Advertisement

புல்லட் ரயிலுக்கு இந்தியில் என்ன? பொறுமை இழந்த அருண் ஜேட்லி

புல்லட் ரயிலுக்கு இந்தியில் என்ன என்று கேட்டதால், செய்தியாளர் சந்திப்பின் போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பொறுமை இழந்தார்.

டெல்லியில் புல்லட் ரயில் குறித்த கருத்தரங்கு ஒன்றில் அருண் ஜேட்லி கலந்து கொண்டு பேசினார். அப்போது புல்லட் ரயில் பற்றி முழுவதும் அறியாமல் பலரும் விவாதங்கள் நடத்தி வருவதாகக் கூறிய ஜேட்லி, தாம் மூன்று முறை ஜப்பான் சென்று வந்ததாகக் குறிப்பிட்டு பேசத் தொடங்கினார். அந்த சமயத்தில் குறுக்கிட்ட ஒருவர், புல்லட் ரயிலை இந்தியில் எவ்வாறு குறிப்பிடுவது என்று கேட்டார்.

இதனால் சற்று பொறுமை இழந்த அருண் ஜேட்லி, விளையாட்டுத் தனமாக அல்லாமல் முக்கியமான விவகாரங்களில் பொறுப்புடன் பேச வேண்டும் என்று கோபமாக கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன