புரட்டிப் போட்ட மழை, வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வரும் சீனா

சீனாவின் இயல்பு நிலையை முடக்கி வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, அங்கு சீரமைப்பு மற்றும் நோய்த்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த வாரம் சீனாவின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் பெய்ததொடர்மழையால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆறுகளில் கரைபுரண்ட வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால், கரையோர நகரங்கள் தத்தளித்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதால், 80 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து அங்கு சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன