புதுச்சேரி நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் கூடுதல் கட்டணம் என வழக்கு

புதுச்சேரி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க 2 வாரத்தில் குழு அமைக்க, யுஜிசி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதேபோல், தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கும் கட்டணம் நிர்ணயிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் இன்று, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, புதுச்சேரி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்ய, மத்திய அரசு பரிந்துரைத்த ஸ்ரீவத்சவா, ஸ்ரீனிவாஸ் ஆகியோர் தலைமையிலான குழுவை 2 வாரத்தில் அமைக்க பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன