Advertisement

புதுச்சேரி-ஐதராபாத் இடையே வரும் புதன்கிழமை முதல் மீண்டும் விமான சேவை துவக்கம் – முதலமைச்சர்

புதுச்சேரி-ஐதராபாத் இடையே வரும் புதன்கிழமை முதல் விமான சேவை தொடங்கவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

வரும் 16 ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்திற்கு விமான சேவை தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக செய்தியாளர் சந்திப்பின்போது நாராயணசாமி கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விமான சேவை நிறுத்தப்பட்டிருந்ததால், புதுச்சேரிக்கு சுற்றுலா பாதிக்கப்பட்டதாகவும், தற்போது மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதால் சுற்றுலா மற்றும் தொழில் வளர்ச்சி பெருகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முதற்கட்டமாக ஹைதராபாதிற்கும், விஜயவாடாவிற்கும் விமானம் இயக்கப்பட உள்ளதாகவும், இதனை தொடர்ந்து பெங்களூரு, கொச்சின் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன