புதுச்சேரியில் கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி

புதுச்சேரியில் பரவலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். புதுச்சேரி நகரப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் ஞாயிறன்று வெயில் வாட்டியெடுத்த நிலையில், மாலைப்பொழுதில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் கொட்டித் தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!