Advertisement

புதுச்சேரியின் அழகை கெடுக்கும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது

புதுச்சேரியின் அழகை கெடுக்கும் வகையில் கட் அவுட்கள் வைக்கக்கூடாது என்றும், அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டியாகும் புதுச்சேரியில் அரசியல்நிகழ்ச்சிகள், பிறந்தநாள் வாழ்த்துகள், திருமணம் என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பேனர்கள் வைக்கும் கலாசாரம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பேனர்கள் வைத்து புதுச்சேரியின் அழகை கெடுப்பதுடன், சுற்றுலா வளர்ச்சியையும் பாதிக்கச் செய்வதாக புகார் எழுந்தது.

நகராட்சியின் அனுமதி பெற்ற பிறகே பேனர் வைக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் எச்சரித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன