Advertisement

புதுக்கோட்டை மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் இன்று மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 41 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கடந்த 8ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை கடற்படையின் இந்த செயலைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருனர். வாழ்வாதாரம் கருதி வேலைநிறுத்தப்போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மீனவர்கள் சங்கத்தினர் அறிவித்ததைத் தொடர்ந்து, மீனவர்கள் இன்று மீண்டும் கடலுக்குள் சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன