புதிய நியாய விலைக்கடை கட்டிடத்துக்கான அடிக்கல்நாட்டு விழா

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் அதிமுக சார்பில் வாக்கு சேகரிக்க வரும்போது வைக்கப்பட்ட கோரிக்கைகள், ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த பாலாஜி நகர் பகுதியில், புதிய நியாவிலைக் கடை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பாலாஜி நகர் பகுதி விரிவாக்கப் பணிகளுக்காக 63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி, திருச்சி தொகுதி அதிமுக எம்.பி. குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!