புதிய இந்தியாவை படைக்க ஆளுநர்கள் துணை நிற்கவேண்டும் – ராம்நாத் கோவிந்த்

புதிய இந்தியாவின் கனவுகளை நனவாக்கும் கடமை ஆளுநர்களுக்கு உள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

நேற்று டெல்லியில் குடியரசுத் தலைவர் தலைமையில் இரண்டு நாள் ஆளுநர்கள் மாநாடு தொடங்கியது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் பேசிய ராம்நாத் கோவிந்த் ஊழல், வறுமை, கல்வியின்மை, சுகாதாராமின்மை, ஊட்டச்சத்து இன்மை போன்ற பிரச்சினைகளில் இருந்து நாட்டை விடுவித்து புதிய இந்தியாவை படைக்க ஆளுநர்கள் துணை நிற்கும்படி வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன