புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருவள்ளுர் மாவட்டம் திருவேற்காடு அருகே புதிதாக கட்டப்பட்ட மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவேற்காடு அடுத்த கோலடி – அயனம்பாக்கம் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானக் கடையால் இடையூறு ஏற்படுவதாக கூறி, அப்பகுதி பொதுமக்கள், மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *