பீகார் மாநிலம் பக்ஷார் ஆட்சியரின் தற்கொலைக்கு முன்னதாக பதிவு செய்த வீடியோ பதிவு சிக்கியது

பீகார் மாநிலம் பக்ஷார் மாவட்ட ஆட்சியரான முகேஷ் பாண்டே தமது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்று பதிவு செய்துள்ள உருக்கமான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

குடிமைப் பணி தேர்வில் 14-வது இடத்தைப் பிடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், ((buxar)) பக்ஷார் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த நிலையில், அவரது சடலம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர் பதிவு செய்த 5 நிமிட வீடியோ காட்சிகள் காவல்துறைக்கு கிடைத்துள்ளது. அதில் தமது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்றும், வாழ்வில் விரக்தி அடைந்ததால் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

தற்கொலை முடிவு குறித்து முகேஷ் பாண்டே தமது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்ததாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன