பிளிப்கார்ட் உடனான பேரத்தை நிறுத்திக்கொண்டது ஸ்னேப்டீல்

ஃப்லிப்கார்ட் ((Flipkart)) உடனான விற்பனை பேரத்தை ((Snapdeal)) ஸ்னாப்டீல் நிறுவனம் நிறுத்திக்கொண்டுள்ளது. ஈ-காமர்ஸ் நிறுவனமான ஃப்லிப்கார்ட், ஸ்னாப் டீல் நிறுவனத்தை விலைக்கு வாங்கி தனது நிறுவனத்துடன் ஒன்றிணைக்க நினைத்தது. இதற்கான பேரத்தின்போது ஸ்னாப்டீல் நிறுவனம் ஆறாயிரம் கோடி ரூபாய் கேட்டதாகவும், ஐயாயிரத்து 700 கோடி ரூபாய் வரை தருவதற்கு ஃப்லிப்கார்ட் தயாராக இருந்ததாகவும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தையை ஸ்னாப்டீல் நிறுவனம் நிறுத்திக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனம் புத்துயிரூட்டப்பட்டு இனி Snapdeal2.0 என்ற புதிய பெயருடன் தனக்கான பாதையில் தொடர்ந்து செல்ல இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது 80 சதவீத ஊழியர்களை குறைத்துக்கொள்ள இருப்பதாகவும் ஸ்னாப்டீல் அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன