பிலிப்பைன்ஸ் அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து – 11 பேர் மாயம்

பிலிப்பைன்ஸ் அருகே புயலில் சிக்கி சரக்கு கப்பல் கவிழ்ந்த விபத்தில், அதிலிருந்த 26 இந்திய ஊழியர்களில் 11 பேர் காணவில்லை என செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, ஜப்பான் கடலோர காவல்படையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல், புயலில் சிக்கி, நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது.

இதையறிந்து மீட்பு பணியில் ஈடுபட்ட ஜப்பான் கடலோர காவல்படையினர், அந்த சரக்கு கப்பலில் பணியிலிருந்த 26 இந்திய ஊழியர்களில், 15 பேரை மீட்டுள்ளனர். மீதமுள்ள 11 பேரை தேடும் பணியில், இரண்டு ரோந்து படகுகளும், மூன்று விமானங்களும் ஈடுபட்டிருப்பதாகவும், புயல் காரணமாக, மீட்பு பணி தாமதமாவதாகவும், ஜப்பான் கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன