Advertisement

பிரபல சினிமா ஃபைனான்சியர் போத்ரா மீண்டும் கைது

பிரபல சினிமா ஃபைனான்சியர் போத்ரா மேலும் ஒரு கந்து வட்டி வழக்கில் மத்திய குற்றபிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கிய பலரை மிரட்டி பலகோடி சொத்துக்களை பறித்துக் கொண்டதாக எழுந்த புகாரில் முகுந்சந்த் போத்ரா மற்றும் அவரது 2 மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் நேஹர் என்பவர் 5 லட்சம் ரூபாய் கடனுக்கு 25 லட்சத்திற்கும் மேல் பணம் கொடுத்தும் மீண்டும் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று போத்ரா மிரட்டல் விடுத்ததாக காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்ததையடுத்து, போத்ரா மற்றும் அவரது மகன்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த பண்டாரி என்பவரும் புகார் அளித்துள்ள நிலையில், பல்வேறு புகார்கள் குவிந்து வருவதால் குண்டர் சட்டத்தில் அவர்களை கைது செய்யவும் போலிசார் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன