பிரதமர் மோடி பொய்யான வெற்று வாக்குறுதிகளை வழங்குகிறார் – ராகுல்காந்தி

பிரதமர் மோடி வெற்று வாக்குறுதிகளை வழங்குவதாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய ராகுல் காந்தி, விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினையில் மோடி பொய்யான வெற்று வாக்குறுதிகளை தெரிவிப்பதாக கூறினார்.

காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை தருவதில்லை என்ற போதும் மக்களிடம் நேரடியாக பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பதாக ராகுல் கூறினார். மோடி அரசு பதவியேற்ற போது விவசாயிகளுக்கு பூரண பாதுகாப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்த போதும், விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை பெருகி விட்டதாக ராகுல் காந்தி சாடியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன