Advertisement

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக முன்னாள் முதலமைச்சசர் ஓ.பன்னீர் செல்வம் இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பை யொட்டி டெல்லி சென்ற அவர், பிரதமரை சந்திக்க முயன்றார்.

ஆனால், இந்த சந்திப்பு நடைபெறாததால், ஷிர்டி சாய்பாபா கோவில், சனி சிங்கணாம்பூர் கோவில் ஆகிய இடங்களில் பன்னீர்செல்வம் வழிபாடு செய்தார். இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு பிரதமரை சந்திக்க ஓ.பி.எஸ்சுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் தெரிவித்தார்.

இச்சந்திப்பை அடுத்து, அதிமுக அணிகள் இணைப்பு குறித்த முக்கிய முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன