பிரதமர் மோடியின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் உற்சாகம், இனிப்புவழங்கி கேக் வெட்டி மகிழ்ச்சி

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது 67வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதற்காக தமது சொந்த ஊரான அகமதாபாத்திற்கு நேற்றிரவு விமானம் மூலம்வந்த பிரதமரை குஜராத் முதல்அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.

இதனிடையே மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய உருவச்சிலை மற்றும் கேக் அமைத்து அகமதாபாத் பாஜகவினரும் பொதுமக்களும் உற்சாகமாக கொண்டாடினர். இதே போல் வடோதாரவிலும், லக்னோவிலும் பாஜகவினர் இனிப்பு வழங்கி மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடினர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன