பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற ஆசியான் தலைவர்கள் – குடியரசு தின விழாவில் 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று குடியரசு தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள ஆசியான் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ள பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்ற பிரதமர் மோடி தமது உரையில் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். மேலும் இந்தியா – ஆசியான் கூட்டுறவின் 25-வது ஆண்டு நிறைவு உச்சி மாநாட்டில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தார்.

இரண்டு நிகழ்வுகளிலும் பங்கேற்க ஆசியான் நாட்டுத் தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக வெளியுறவு அமைச்சகச் செயலாளர் தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதத்தில் இந்தியா – ஆசியான் கூட்டு உச்சி மாநாடு, ஜனவரி மாதத்தில் வணிக மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன