பிம் செயலி மூலம் இதுவரை ரூ.1,500 கோடிக்கு பரிவர்த்தனை

மத்திய அரசின் பிம் செயலி மூலம் இதுவரை 1,500 கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினரான ஜெயா பச்சன், மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பிம் செயலியை இதுவரை 2 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், 50 லட்சம் பரிவர்த்தனைகள் நடைபெற்று இருப்பதாகவும் கூறினார். பின்னர் பேசிய ஜெயா பச்சன் மின்னணு பரிவர்த்தனை முறைக்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்காக வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன