பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை- அமித்ஷா

பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடம் இல்லை என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமித்ஷா பா.ஜ.க. தேசியத் தலைவர் பதவியில் இருந்து விலகக் கூடும் என்று செய்திகள் பரவின. இந்நிலையில் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் தலைவராக தனக்கு பல்வேறு பொறுப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

கட்சித் தலைவராக மகிழ்ச்சியுடனும் முழுமனதுடனும் செயலாற்றி வருவதாகத் தெரிவித்த அவர், அதில் இருந்து விலகும் பேச்சுக்கே இடம் இல்லை என்று தெரிவித்தார். பீஹாரில் பா.ஜ.க. எந்தக் கட்சியையும் உடைக்கவில்லை என்று கூறிய அவர், நிதீஷ்குமார் ஊழல்வாதிகளுடன் சேர்ந்து பணியாற்ற விரும்பாத நிலையில் பா.ஜ.க. அவருக்கு ஆதரவு அளித்திருப்பதாகக் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன