பாலிவுட் படங்களுக்கு சர்வதேச திரைப்பட ரசிகர்கள் சார்பில் விருதுகள்

நியுயார்க்கில் நடைபெற்ற சர்வதேச இந்திய பிலிம் அகாடமி திரைப்பட விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கௌரவிக்கப்பட்டார்.

பாலிவுட் கலைஞர்களுக்கான சர்வதேச இந்திய பிலிம் அகாடமி விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திரளான நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர். நடிகர் சைப் அலி கான் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர் ஆகியோர் விருது விழாவை தொகுத்து வழங்கினர்..

இவ்விழாவில் சிறந்த படமாக, விமான கடத்தல் சம்பவத்தை மையமாக கொண்ட நீரஜாவும் சிறந்த இயக்குனராக, அமிதாப் பச்சன் நடித்த பிங்க் படத்தை இயக்கிய அனிருத்தா ராயும் தேர்வு செய்யப்பட்டு விருதுகளைப் பெற்றனர்.

சிறந்த நடிகையாக உடுத்தா பஞ்சாப் படத்தில் நடித்த அலியா பட் தேர்வு செய்யப்பட்டார்.இப்படத்தில் நடித்த சாகித் கபூர் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த இசையமைப்பாளராக ae dil hai mushkil படத்திற்காக ப்ரீத்தம் தேர்வு செய்யப்பட்ட போதும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த இசையை அளித்து வரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு கௌரவம் செய்யப்பட்டது. ஆண்டின் சிறந்த பெண்மணி விருது நடிகை டாப்சிக்கு கிடைத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன