பாலருவியில் குளிக்கச் சென்ற தமிழக சுற்றுலா பயணி மீது தாக்குதல்

கேரள மாநிலத்தில் உள்ள பாலருவியில் குளிக்கச் சென்ற தமிழக சுற்றுலாப் பயணியை அம்மாநில, வனத்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கி இழுத்துச் சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் கடந்த 20 தினங்களாக மழை இல்லாததால் குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக குற்றாலம் வந்த சுற்றுலாப் பயணிகள் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியிலுள்ள பாலருவியை நோக்கி படையெடுத்துள்ளனர். பாலருவியில் குளிக்க ஒரு நபருக்கு 40 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இன்று விடுமுறை தினம் என்பதால் பாலருவியில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இந்த நிலையில் தமிழக பயணிகளை மட்டும் கேரள வனத்துறையினர், நீண்ட நேரம் காக்க வைத்து அருவிக்கு குளிக்க அனுப்புவதாக கூறி, சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனனர். இதனால் ஆத்திரமடைந்த கேரள வனத்துறையினர், வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கி, அலுவலகத்திற்கு இழுத்துச் சென்றனர்.

அலுவலகத்திற்குள் சென்று கதவை பூட்டி வைத்து தமிழக சுற்றுலாப்பயணியை கேரள வனத்துறையினர் தாக்கியுள்ளனர். தமிழக சுற்றுலாப் பயணி தாக்கப்பட்ட தகவல் அறிந்து அங்கு திரண்டு சக பயணிகள் கேரள வனத்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பால் அருவிக்குச் செல்லும் பாதை தற்காலிமாக மூடப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன