பாரிஸில் போலீசாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் போலீசாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த நபரின் பெயர் யூசிஃப் அல் பெல்கிகி என ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது. செவ்வாய் அன்று இரவு மத்திய பாரிஸில், வாகனத்தைத் தடுத்து நிறுத்தியதும் காரில் இருந்து இறங்கிய நபர், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், படுகாயமடைந்த போலீசார் ஒருவர், உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். பெல்ஜியத்தில் இருந்து ரயிலில் வந்த அந்த நபர் பாரிஸில் வீடு எடுத்து தங்கி இந்த தாக்குதலை அரங்கேற்றியதை அறிந்த போலீசார், அவனுக்கு வேறு யாரேனும் உடந்தையான இருக்கின்றனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பெயரையும் அறிவித்துள்ள நிலையில், தங்களது இயக்கத்துடன் நேரடித் தொடர்பில் அந்த நபர் இருந்ததாகவும் கூறியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன