பாமக சார்பில் அத்திக்கடவு – அவினாசி விழிப்புணர்வு பேரணி

அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தலைமையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடைபெற்ற இரு சக்கர வாகன பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ள இத்திட்டத்திற்கு ஆதாராமாக உள்ள பவானி ஆற்றை தேக்கம்பட்டியில் அன்புமணி பார்வையிட்டார்.

பின்னர் காரமடையில் பொதுமக்களிடையே அத்திக்கடவு – அவினாசி திட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதையடுத்து, இரு சக்கர வாகனத்தில் பேரணி சென்ற அன்புமணி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பேரணியை நிறைவு செய்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன