பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்த பிறகே வருமான வரிக் கணக்கு தாக்கல் விவரங்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத வரை வருமான வரிக்கணக்குகள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தில் நடைபெற்ற மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன