பாதுகாப்பு விவகாரத்தில் முடிவெடுக்க அனைத்து நாடுகளுக்கும் உரிமை உண்டு – அருண்ஜேட்லி

பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை இருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது உள்ளிட்ட பிரச்னைகளில், எந்த ஒரு நாடும் அதனதன் கொள்கைகளுக்கு ஏற்பத்தான் முடிவெடுக்க இயலும் என்றும் ஜேட்லி கூறியுள்ளார். ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றும் மத்திய அரசின் முடிவுக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மஹாஜனும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன