பாதியில் நிற்கும் பொது கிணறு அமைக்கும் பணிகள்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பொதுகிணறு அமைக்கும் பணியை துரிதப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தனகனந்தல் கிராமத்தில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, அங்கு 11 லட்சம் ரூபாய் செலவில் கிராம நிர்வாகம் சார்பில் பொது கிணறு வெட்டும் பணிகள் தொடங்கின.

ஏப்ரல் மாதம் தொடங்கிய பணிகள் இதுவரை நிறைவடையவில்லை. மழைக்காலம் தொடங்கயுள்ளதால், பாதியளவு வெட்டப்பட்ட கிணறு சேதமடையும் என்று கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன