பாதாள சாக்கடை அமைக்க டெட்டனேட்டர்கள் மூலம் வெடிவைப்பு

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பாதாள சாக்கடை அமைக்க வெடிவைத்து பள்ளம் தோண்டப்பட்டதால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

உளுந்தூர்பேட்டையில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் பாறைகள் நிறைந்திருந்ததால், அவற்றை தகர்க்க டெட்டனேட்டர்கள் மூலம் வெடிகள் வைக்கப்பட்டன. இதனால், அப்பகுதிகளில் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் சில வீடுகள் விரிசல் அடைந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை ஊழியர்கள் நிறுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன