பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை உருவ பொம்மைக்கு செருப்பு மாலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பொள்ளாச்சி சார்பு நீதிமன்றம் அருகே தமிழிசை உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்ததுடன், நீட் தேர்வுக்கு ஆதரவளிக்கும் தமிழிசை ஒழிக என்றும் வாசகம் எழுதப்பட்டிருந்தது. தகவலறிந்த போலீசார் தமிழிசை உருவ பொம்மையை அகற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!