Advertisement

பாஜகவினர் அருவறுப்பான அரசியலில் ஈடுபடுவதாக ஹர்திக் குற்றச்சாட்டு

குஜராத்தில் தனது அந்தரங்க வாழ்க்கையை விமர்சிப்பதன் மூலம் அருவருப்பான அரசியல் செய்வதாக ஹர்திக் பட்டேல் கூறியுள்ளார்.
படேல் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும், ஹர்திக் படேல், குஜராத் மாநில தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே ஹர்திக் படேல், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற, சிடியை பாஜக வெளியிட்டது. இது குஜராத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள ஹர்திக் படேல், பாஜக தற்போது அருவருப்பான அரசியல் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதாக எண்ணி, குஜராத் மாநில பெண்களை இழிவுபடுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இடஒதுக்கீடு தொடர்பாகவும், பட்டேல் சமூகத்தினர் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பாகவும் காங்கிரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன