பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

அதிகாலை 5 மணியளவில் அத்துமீறலை தொடங்கிய பாகிஸ்தான் ராணுவம், சிறிய ரக பீரங்கிகள் மற்றும் தானியங்கி எந்திர துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மேந்தர் (mendhar) பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் குண்டடி பட்டு உயிரிழந்தார். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே குப்வாராவில் உள்ள 41 ராஷ்டிரிய ரைபிள்ஸ் ராணுவ முகாம் மீது அதிகாலை 2 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

10 நிமிடங்கள் அவர்கள் தொடர்ந்து நடத்திய தாக்குதலில் வீரர் ஒருவர் காயம் அடைந்தார். தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன