பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசார் விவகாரத்தில் ஆதாரம் தேவை

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆசாருக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்க உறுதியான ஆதாரம் தேவைப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் பதான்கோட் விமான தள தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ஐ.நா.வுக்கு இந்தியா கடிதம் எழுதியது. இந்த நிலையில், மசூத் ஆசார் விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே வேறுபாடுகள் இயற்கையானது என்று சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மசூர் ஆசாத் விவகாரத்தை பொறுத்தவரை வலுவான ஆதாரங்கள் இருந்தால் ஐநாவில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன