பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராக கவுதம் பாம்பாவாலே நியமனம்

பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக இருந்த கவுதம் பாம்பாவாலே((Gautam Bambawale)), சீனாவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். போலந்து நாட்டின் தூதராக இருந்த அஜய் பைசாரியா ((Ajay Bisaria)), பாகிஸ்தானின் தூதராக நியமிக்கப் பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சீனாவுக்கான தூதராக இருந்த விஜய் கோகலே, வெளியுறவுத்துறையின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விரைவில் இவர் வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்க வாய்ப்பிருப்பதாகக் சொல்லப்படுகிறது. சீனாவுடன் அண்மையில் ஏற்பட்ட டோக்லம் விவகாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அந்நாட்டுக்கு புதிய தூதர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!