பாகிஸ்தானில் 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை

பாகிஸ்தானில் 5 ஆண்டுகளில் 298 புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் எம்.பி. ஷேக் ரோஹைல் அஸ்கரின் கேள்விக்கு எழுத்துபூர்வ பதில் அளித்துள்ள அந்நாட்டு உள்துறை அமைச்சகம், 2012-ஆம் ஆண்டு 48 பேருக்கும், 2013-ஆம் ஆண்டு 75 பேருக்கும் 2014-ஆம் ஆண்டு 76 பேருக்கும் 2015- ஆம் ஆண்டு 15 பேருக்கும் கடந்த ஆண்டு 69 பேருக்கும் இந்த ஆண்டு ஏப்ரல் வரை 15 பேருக்கும் குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் வெளிநாட்டவர் குடியுரிமை பெறுவது கடினமானது என்ற நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து பலர் பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!