பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர்

பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர்.

(Baluchistan) பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள (Quetta) குவட்டா நகரின் நெரிசலான சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 8 பேர் ராணுவத்தினர் என்றும் 7 பேர் பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் குவட்டா சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். துணை ராணுவப் படையினர் சென்ற ரோந்து வாகனத்தின் மீது சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பலுசிஸ்தான் உள்துறை அமைச்சர் (Sarfraz Bugti) சர்ஃப்ராஸ் புக்தி தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன