பாகிஸ்தானில் களைகட்டும் சுதந்திர தின கொண்டாட்டம்

பாகிஸ்தானில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வண்ணமயமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்நாட்டின் 70-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கின.

கராச்சி நகரில் உள்ள கட்டிடங்கள் பாகிஸ்தான் தேசியக்கொடியைப் போல, வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. 12 மணி ஆனதும் அங்கு கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மண்ணிலிருந்து விண்ணில் சென்று வண்ணங்களாக வெடித்துச் சிதறிய வாணங்களை திரளானோர் ஆர்ப்பரித்து ரசித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன