பாகிஸ்தானில் அனைவரும் நேர்மையாக உள்ளனரா? – நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தானில் உள்ள அனைவரும் நேர்மையாகவும், நன்னெறி தவறாமலும் நடந்து கொள்கின்றனரா? என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து சேர்த்தது குறித்த பனாமா ஆவணங்களில் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் பெயரும் இருந்தது. இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்ததையடுத்து பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலகினார். இந்த நிலையில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் பேசிய அவர், தம் மீது ஊழல் கறை படியவில்லை என்றும், இதுவரை லஞ்சமோ, கமிஷனோ பெறவில்லை என்றும் கூறினார்.

ஊதியம் வாங்கி இருந்தால் தானே வருமானம் குறித்த கணக்கை கூற முடியும் என்று தெரிவித்த நவாஸ், தம்முடைய குடும்பத்தினரை தவிர மற்ற அனைவரும் நேர்மையாகவும், நன்னெறி தவறாமலும் நடக்கின்றனரா என்று கேள்வி எழுப்பினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன