Advertisement

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – நீரில் மூழ்கிய பவானியம்மன் கோவில்

கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் தொடர் மழை பெய்ததன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 100 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 98 அடியை எட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி அணைக்கும் வரும் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர், நான்கு மதகுகள் வழியாக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஆர்ப்பரித்து வரும் தண்ணீரால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் ஆற்றின் கரையோரம் உள்ள பவானியம்மன் கோவிலும் தண்ணீரில் பாதியளவு மூழ்கியுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, மேட்டுப்பாளையம் தாசில்தார் ரங்கராஜன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பரவலாக பெய்துவரும் கனமழையின் காரணமாக, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கை பார்த்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன