பழவேற்காட்டில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை

சென்னையை அடுத்த பழவேற்காட்டில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. சென்னையை அடுத்த பழவேற்காட்டில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.

தற்போது மழையுடன் கடல் சீற்றம் அதிக அளவில் காணப்படுகின்றது. சின்னக்குப்பம், பெரிய குப்பம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் இருப்பதால், ஐந்து மீட்டர் உயரத்திற்கும் மேலாக அலைகள் எழும்பி தூண்டில் வளைவுகளை தாண்டி விழுகிறது. இதன் காரணமாக படகுகள் கடலுக்குள் செல்லாமல், கடற்கரையோரம் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன