பழனி அருகே தோட்டத்தில் காயத்துடன் தஞ்சமடைந்த யானை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தோட்டத்தில் காயத்துடன் தஞ்சமடைந்த யானையின் அருகே குட்டி யானை நிற்பதால் யானைக்கு சிகிச்சை அளிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொருந்தலாறு அணை பகுதியில கடந்த இரண்டு நாட்களாக பெண் யானை ஒன்று குட்டியுடன் சுற்றி வந்தது. இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக புளியம்பட்டி அருகே உள்ள தனியார் தோட்டத்தில் தஞ்சமடைந்த பெண் யானை, நடக்க முடியாமல் கீழே விழுந்தது. உடல் நலக்குறைவு காரணமாக எழுந்து நடக்கக் கூட முடியாமல் தவித்து வரும் அந்த யானையின் அருகே, குட்டி யானை நிற்பதால் யாரும் அருகில் செல்ல முடியாத சூழல் உள்ளது. இதனால் யானைக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை.

சிகிச்சையளிக்க கால்நடை மருத்துவர் குழு வரவழைக்கபட்டுள்ள நிலையில், குட்டியானையை அங்கிருந்து விரட்டி பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன