பள்ளிக்கரணையில் மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி பெண்கள் போராட்டம்

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி பெண்கள் போராட்டம் நடத்தினர்.

பாலாஜி நகரில் இயங்கும் அரசு மதுக்கடையால் பள்ளி மாணவர்களும், பெண்களும் மிகுந்த அவதியடைவதாக கூறப்படுகிறது. மதுக்கடையை அகற்றக்கோரி கடந்த மாதம் போராட்டம் நடைபெற்ற போது, 2 நாட்களில் மதுக்கடை அகற்றப்படும் என்று போலீசார் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் மதுக்கடையை மூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், மதுக்கடை முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மடிப்பாக்கம் போலீசார் வரும் புதன்கிழமைக்குள் மதுக்கடை மூடப்படும் என்று உறுதியளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன