பள்ளிகளில் ‘உள்ளேன் ஐயா’ என்பதற்கு பதில் ‘ஜெய்ஹிந்த்’ என கூறலாம்

மத்தியப்பிரதேசத்தில் பள்ளிகளில் வருகைப் பதிவேட்டுக் கணக்கின்போது, “உள்ளேன் ஐயா” என்று கூறுவதற்கு பதில் ‘ஜெய்ஹிந்த்’ எனக் கூறும் நடைமுறை வரும் நவம்பர் 1 முதல் அமலாகிறது.

ஏற்கெனவே ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் தேசியக் கொடி ஏற்றுவது கட்டாயம் என சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு அறிவித்தது. இந்நிலையில் வரும் நவம்பர் 1 முதல், வருகைப் பதிவேட்டின்போது, ‘உள்ளேன் ஐயா’ அல்லது ‘பிரஸன்ட் சார்’ (Present Sir), எனக்கூறுவதற்கு பதில், ஜெய்ஹிந்த் எனக் கூறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாத்னா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி இதை அக்டோபர் 1 முதலே அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.நாள்தோறும் ஜெய்ஹிந்த் எனக் கூறுவது, பள்ளி மாணவர்களிடையே தேசப்பற்றை வளர்க்கும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் விஜய் ஷா தெரிவித்துள்ளார்.

ஆனால், முதலில் கல்வியில் பின்தங்கிய மாநிலம் என்ற நிலையை மாற்ற அதன் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அம்மாநில எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன