பர்ஸ் திருடியதை ஆசிரியர் கண்டித்ததால் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட சிறுவன்

வேலூர் திருப்பத்தூர் அருகே பள்ளியில் மாணவனிடம் பர்ஸ் திருடியதை ஆசிரியர் கண்டித்ததால் அவமானத்தில் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி சிறுவன் தீ வைத்துக் கொண்டுள்ளார்.

ஜோன்றம்பள்ளியை சேர்ந்த முருகன் என்பவரின் மகனான 14 வயது சிறுவன், இன்று பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது, நேற்று பள்ளியில் சக மாணவனிடம், இந்தச் சிறுவன் பர்சை திருடியதாகவும், அதை ஆசிரியர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவமானம் அடைந்த அந்த சிறுவன் இன்று பள்ளி செல்வதை தவிர்ப்பதற்காக கேனில் மண்ணெண்ணெய் எடுத்துச் சென்று மாந்தோப்பில் தனக்கு தானே உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன