பரோல் முடிந்ததால் சசிகலா மீண்டும் சிறையில் அடைப்பு

சசிகலாவின் 5 நாள் பரோல் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் அவர் பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டார்.

கணவர் நடராஜனின் உடல் நிலையைக் காரணம் காட்டி பரோல் கோரிய சசிகலாவுக்கு கடந்த 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பரோல் வழங்கப்பட்டது. மருத்துவமனை, வீடு ஆகிய இடங்களை தவிர வேறு எங்கும் செல்லக்கூடாது, பார்வையாளர்களை சந்திக்கக்கூடாது அரசியல் மற்றும் பொது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பரோல் வழங்கப்பட்டது. சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பரோல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் இன்று மீண்டும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன