பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு

தமிழக சட்டசபையில் சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை தலைமை இயக்குனர் டி.கே. ராஜேந்திரன் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். தலைமை செயலகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் நேரில் ஆய்வு செய்தனர். சனிக்கிழமை நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க, எம்எல்ஏ.க்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி மற்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் எம்எல்ஏ.க்களும் பங்கேற்பதால், தலைமை செயலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன