Advertisement

பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு சர்ஜிகல் ஸ்டிரைக்கும் ஒரு வழிதான் – பிபின் ராவத்

பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு பல்வேறு வழிகள் இருந்தாலும் அதில் சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதலும் ஒன்று என ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, எல்லைப் பகுதிகளைப் பொறுத்தவரை இந்தியா பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறிய அவர், எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் இந்திய ராணுவத்துக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கூறிய பிபின் ராவத், அவர்களை அழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ராணுவம் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தானுடன் வளர்ந்து வரும் பிரச்னைகள் குறித்து அரசியல் ரீதியாகத்தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன