Advertisement
Advertisement

பனாரஸ் இந்து பல்கலை.,யில் மாணவிகள் அமைதிப் பேரணி

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் போராடிய போது தடியடி நடத்தப்பட்ட நிலையில், தங்களுக்கு வளாகத்துக்குள் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரி இன்று அமைதிப் பேரணி நடத்தினர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள், மாலை நேர இருளைப் பயன்படுத்தி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரளித்தபோது, மாணவிகளை நிர்வாகத்தினர் கண்டித்ததாக கூறி, பிரதமர் மோடியின் வாரணாசி வருகையின்போது போராட்டம் நடத்தினர். இதையடுத்து நேற்று நள்ளிரவு போராட்டம் நடத்திய மாணவிகள் மீது தடியடி நடத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று, அமைதிப் பேரணி நடத்திய மாணவிகள், பல்கலைக்கழக வளாகத்துக்குள், விளக்குகள் சரிவர எரிவதில்லை என்பதால் அதை சீரமைக்க வேண்டும் என்றும், சிசிடிவி கேமரா பொருத்துவதோடு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன