Advertisement
Advertisement

காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாக்கியூர் ரஹ்மான் லக்வியின் மருமகன் உள்ளிட்ட 6 தீவிரவாதிகளை, காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள ஹாஜின் பகுதியை அடுத்த சண்டெர்கீர் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் இந்திய விமானப்படையின் அதிரடிப்படை வீரர்களும் பங்கேற்றனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதிரடிப் படை பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். ராணுவ வீரர்கள் இருவர் காயம் அடைந்தனர். உயிரிழந்த தீவிரவாதிகளில் ஓவைட் என்பவன், 2008ஆம் ஆண்டு மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாக்கியூர் ரஹ்மான் லக்வியின் மருமகன் ஆவான். தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன