பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை

கனடாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிக்கையில், விளையாட்டுப் போட்டிகளில், 3 தங்க பதக்கம் வென்ற கணேசன் என்பவருக்கு 15 லட்சம் ரூபாயும், 1 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்கள் வென்ற மனோஜ்-க்கு 11 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 தங்கம் வென்ற வீரர் செல்வராஜுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள் ரஞ்சித் குமாருக்கு 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும், சுந்தருக்கு 75 ஆயிரம் ரூபாயும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!